திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2699 | திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய அவதாரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியவொண்ணாததென்கிறது இப்பாட்டில்) 3 | அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3- | பதவுரை Show / Hideஅமைவு உடை, Amaivu udai - நல்ல பல பரிபாகத்தை யுடைத்தான அறம் நெறி முழுவதும், Aram neri muzhu vadhum - தரும மார்க்கம் எல்லாவற்றாலும் உயர்வு அற உயர்ந்து, Uyarvu ara uyarnthu - இதற்கு மேல் உயர்த்தி யில்லை என்னும் படியாக மிக வுமுயர்ந்தவர்களாகி அற, Ara - மிகவும் நிலம் அது ஆம், Nilam adhu aam - கை வந்திருக்கப் பெறுவதாகிற அமைவு உடை, Amaivu udai - சதிரை யுடையரான அமரரும், Amararum - பிரமன் முதலிய தேவர்களும் யாவையும், Yaavaiyum - எல்லா அசேதனங்களும் அமைவு உடை, Amaivu udai - (ஆச்சரியப் படத் தகுந்த அமைதியை யுடைய கெடல், Kedal - முதல் ஸ்ருஷ்டியென்ன ஸம்ஹாரமென்ன யாவரும், Yaavarum - எல்லாச் சேதனர்களும் தான் ஆம், Thaan aam - தானே யாம்படியான அமைவு உடை, Amaivu udai - பொருத்தம் பொருந்திய நாரணன், Naaranan - நாராயணனுடைய மாயையை, Maayaiyai - அவதார ரஹஸ்யத்தை யாரே அறிபவர், Yaare arivabar - ஆர் தாம் அறியவல்லார்? (ஆருமில்லை) |