திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2700 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2700திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய திவ்யாவதாரங்கள் ஒருவர்க்கும் அறியப் போகாதோவென்ன, அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவையாய் மற்றையோர்க்குச் சிறிதும் அறியப்போகாதவனாயிருக்குமென்கிறாரிதில்.) 4
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான் யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான் பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான் பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-
பதவுரை Show / Hide
பேரும், Perum - (விக்ரஹத்தைப் பற்றின) திருநாமங்களும்
பிற, Piru - (அந்தத் திருநாமங்களுக்கேற்ற) விக்ரஹங்களும்
பல ஆயிரம் உடைய, Pala aayiram udaiya - அனேகமாயிரம் உடையனாய்க் கொண்டு தோற்றி
எம்பெருமான், Emperumaan - எமக்கு நாதனானவனாய்,
யாரும், Yaarum - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்
ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான், Oru nilai maiyan ena arivu ariya emperumaan - ஒரு படியை யுடையவன் என்று அறுதியிட வொண்ணாத பெருமானாய்.
யாரும், Yaarum - (அன்பர்களாகில்) அறிவில்லாதவர்களானார்க்கும்.
ஓர் நிலைமையன் என் அறிவு எளிய எம்பெருமான், Oru nilai maiyan en arivu eliya emperumaan - ஒரு படிப்பட்டவனென்று அறியக்கூடிய பெருமானான பகவானுக்கு
ஓர் பேரும், Oru perum - ஒரு பேரும்
ஓர் உருவமும், Oru uruvamum - ஒரு ரூபமும்
உளது இல்லை, Uladhu illai - உண்டாயிருப்பதில்லையென்று (பிரதிகூலர்க்கும்)
இலது இல்லை, Iladhu illai - இல்லையாய் இருப்பதில்லையென்று (அநுகூலர்க்கும்)
பிணக்கே, Pinakke - நித்ய விவாதமாயேயிருக்கும்.