திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2702 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2702திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (த்ரிமூர்த்திஸாம்ய ப்ரமத்தைப் பரிஹரிக்குமடைவிலே அருளிச் செய்கிற பாசுரம் இது) 6
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள் உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-
பதவுரை Show / Hide
உணர்ந்து உணர்ந்து, Unarndhu unarndhu - உணர்வையே இயற்கையாக வுடையானாகி
இழிந்து அகன்று உயர்ந்து, Izhindhu akanru uyarthu - (அந்த உணர்வு அகண்ட மாகையாலே) பத்துத் திக்கிலும் வியாபித்து
உரு வியந்த, Uru viyandha - ஜடப் பொருளில் நின்றும் வேறுபட்டிருக்கிற
இ நிலைமை, I nilai mai - இந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை
உணர்ந்து, Unarndhu - கேள்வியாலே அறிந்து
உணர்ந்து, Unarndhu - மநநத்தினாலே அறிந்து
உணரிலும், Unarilum - யோகாத்தாலே ப்ரத்யக்ஷமாக அறிந்தாலும்
இறை நிலை உணர்வு, Irai nilai unarvu - ஸர்வேச்வரனுடைய நிலைமையை அறிவதாவது
அரிது, Aridhu - அருமையாயிருக்கின்றது; (ஆயினும்;)
உயிர்கான், Uyirkaan - சேதநர்களே!
அரி அயன் அரன் என்னும் இவரை, Ari ayan aran ennum ivarai - விஷ்ணு பிரமன் ருத்ரன் என்று சொல்லப்படுகிற இவர்களை
உணர்ந்து உணர்ந்து, Unarndhu unarndhu - (ஒவ்வொருவருடையவும்) குணம் முதலியவற்றைக் கொண்டு பலகாலும் ஆராய்ந்து.
உரைத்து உரைத்து, Uraithu uraithu - (அதற்கு இணங்கப்) ப்ரமாணங்களை வ்யவஹரித்துப் பார்த்து
மனப்பட்டது ஒன்று, Manappattadhu onru - உங்கள் மனதில் ஈச்வரனாகத் தோன்றின ஒரு பொருளை
உணர்ந்து உணர்ந்து, Unarndhu unarndhu - பலகாலும் அநுஸந்தித்து
உரைத்து உரைத்து, Uraithu uraithu - (அப்பொருளின் மந்திரம் திருநாமம் முதலியவற்றைப்) பலகாலும் சொல்லி
இறைஞ்சுமின், Iraijumin - உபாஸியுங்கோள்