திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2703 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2703திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஆராய வேண்டிய படியை விசதமாகவுபதேசித்து விரைவாக ஆச்ரயியுங்கோளென்கிறாரிப்பாட்டில்.) 7
ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-
பதவுரை Show / Hide
ஒன்று என, Ondru ena - ஒன்றென்றும்
பல என, Pala ena - பலதென்றும் (அதாவது ஒருவர் பிரதானனென்றும் பலர் பிரதானனென்றும்)
அறிவு அரு, Arivu aru - அறிதற்கு அரிதான
வடிவினுள், Vadivinul - உருவுக்குள்ளே
நின்ற, Nindra - நிலைத்திருக்கிற
நன்று, Nandru - விலக்ஷணமான
எழில், Ezlil - கல்யாண குணங்களாலே பிரகாசிக்கிற
நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணன்
நான்முகன், Naanmugan - பிரமன்
அரன், Aran - ருத்ரன்
என்னும் இவரை, Ennum ivarai - என்கிற இத் தெய்வங்களை
ஒன்ற, Ondru - மத்யஸ்த த்ருஷ்டியாக
நும் மனத்து வைத்து, Num manathu vaithu - உங்களது நெஞ்சில் வைத்து
உள்ளி, Ulli - (அவர்களை ஸ்வரூப ஸ்வ பாவங்களை ப்ராமணங் கொண்டு) ஆராய்ந்து
நும், Num - உங்களுக்குண்டான
இரு பசை அறுத்து, Iru pasai aruthu - இருவர் திறத்திலும் ஈச்வர புத்தியை யொழித்து
அவனிடை, Avanidai - அந்த நன்றெழில் நாராயணன் பக்கலிலே
நம்முடை, Nammudai - நம்முடைய
நாள், Naal - வாழ் நாளில்
நன்று என, Nandru en - நன்றாக
நலம் செய்வது, Nalam seyvadhu - பக்தி பண்ணுதற்கு உரியது.