திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2705 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2705திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (கீழ்ப்பாசுரங்களில் பிரமன் முதலானருடைய அவரத் தன்மையையும் எம்பெருமானுடைய பரத்வத்தையும் குறிப்பட்டருளினார். இப்பாட்டில், அந்தப் பிரமனும் சிவனும் எம்பெருமானைப்பற்றியே தங்கள் ஸ்வரூபம் பெற்றிருக்கிறபடியையும், அந்த ஸாமாந்ய தெய்வங்களும் காலிடமாட்டாத இந்நிலவுலகத்திலே எம் பெருமான் ஆச்ரியதர்கட்காக வந்து திருவவதரிக்கிறபடியையும் அருளிச் செய்கிறார்) 9
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித் தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும் புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-
பதவுரை Show / Hide
எழு, Elu - பதினான்கு லோகங்களையும் நிர்வகித்தற்குரிய எழுச்சி யுடைய
திசை முகன், Disai mugan - நான்முகக் கடவுள்
திரிபுரம் எரித்தவன், Thiripuram erithavan - முப்புரங்களை எரித்தவனாகிய ருத்திரன்
வலத்தனன், Valathanan - வலதுபக்கத்திலிருப்பான்;
பின்னும், Pinnum - மேலும்
அவன் புலப்பட, Avan pulappada - அவன் கண்ணுக்கு இலக்காக
தானே, Thaane - தானே
படைத்த, Padaitha - ஸ்ருஷ்டி செய்த
நல் உலகமும் தானும், Nal ulagamum thaanum - நல்ல லோகங்களும் தானுமாக
துந்தித் தலத்து இடம்பெற, Thundhit hthalathu idampera - திருநாபியில் இடம் பெற்றிருக்க,
அகத்தனன், Agaththananan - அவதரித்து உள்ளேயிருப்பன்;
சொல புகில், Sola pugil - இப்படி சொல்லப் பார்த்தோமாகில்
இவை பின்னும், Ivai pinnum - இந்தக் குணங்கள் பிள்ளையும்
வயிற்றுள, Vayitrul - தொலையாமல் உள்ளே யிருக்கும்
இவை அவன் துயக்கு, Ivai avan thuyakku - இவைகளே அவன் மயங்கப் பண்ணும்படி