| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2706 | திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமான் தன்னிடத்து அமர்ந்த காதல் அமையப்பெறாதவர்கள் திறத்தில் பண்ணும் மாயமயக்குக்களை முன்னடிகளில் அருளிச் செய்து, அது தான் எப்படியே யானாலும், அவன் காட்டிய வழியே காணவிருக்கின்ற நாம் மனமொழி மெய்களாலே நம் விடாய்கெட உலகளந்த திருவடிகளை அநுபவிப்போமென்று தாம்கொண்ட பாரிப்பைப் பின்னடிகளில் வெளியிடுகிறார்.) 10 | துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன் புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10- | துயக்கு அறு மதியில், Thuyakku aru madhiyil - கலக்க மற்ற நெஞ்சில் பிறந்த நல் ஞானத்துள், Nal gnanathul - நல்ல ஞானத்தையுடையரான அமரரை, Amararai - தேவர்களையும் துயர்க்கும், Thuyarkkum - கலங்கப் பண்ணுகிற மயக்கு உடை, Mayakku udai - மயக்கும் வல்லமையை யுடைய வானிலும் மாயைகள், Vaanilum maayai gal - அவதார ஆச்சரியங்கள் எல்லையற்ற ஆகாசத்திற் காட்டிலும் பெரியன வல்லன், Periyana vallan - பெரியனவாகச் செய்ய வல்லவனாய், புயல், Puyal - நீலமேகம் போலே கரு நிறந்தனன், Karu nirandhanan - கருநிறத்தை யுடையனான எம்பெருமானுடைய பெரு நிலம் கடந்த, Peru nilam kadandha - பெரிய பூமிப் பரப்பை எளிதாக அளந்த நல், Nal - விலக்ஷணமான அடிபோது, adipodhu - திருவடித் தாமரைகளை அமர்ந்து, Amarnthu - வேறு பிரயோஜனங்களில் பற்றற்று அமர்ந்து அயர்ப்பு, Ayarppu - மறப்பில்லாதவனாய் அவற்றுவன், Avaruvan - முறை மாறி அவன் குணங்களை வாயாலே சொல்லுவேன்; தழுவுள்ள, Thazhuvullan - ஆலிங்கனம் பண்ணுவேன்; வணங்குவன், Vananguvan - தலையாலே வணங்குவேன் |