| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2707 | திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (இத்திருவாய்மொழி வல்லவர்கள் நித்யஸூரிகளோடொக்க உயர்த்தியைப் போய்ப்பெற்று ஸம்ஸார ஸம்பந்தமறப் பெறுவரென்று பலன் சொல்லிக்காட்டுகிற பாசுரம் இது) 11 | அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11- | அமரர், Amarar - தேவர்கள் தொழுது எழ, Tholuthu elu - ஸேவித்து விருத்தியை யடைய அமரர், Amarar - பொருந்தின பொழில் வளம், Pozhil valam - சோலை வளமுள்ள குருகூர், Kurugoor - திருக் குருகூரில் அவதரித்த சடகோபன், Sadagopan - ஆழ்வாருடைய குற்றேவல்கள், Kurraevalgal - (வாக்கினாலாகிய) கைங்கரியமான அமரர் சுவை, Amarar suvai - சுவையமைந்த ஆயிரத்து அவற்றினுள், Aayirathu avatrinul - ஆயிரம் பாடலுக்குள் அலைகடல், Alaikadal - அலையெறிகின்ற திருப்பாற்கடலை கடைந்தவன் தன்னை, Kadaindavan thanai - கடைந்தவனான ஸர்வேச்வரனைக் குறித்து இவை பத்தும், Ivai pattum - இந்தப் பத்துப் பாசுரமும் வல்லார், Vallar - கற்க வல்லவர்கள் அமரரோடு, Amararodu - நித்யஸூரிகளோடு உயர்வில், Uyarvil - பரமபதத்தில் சென்று, sendru - சேர்ந்து தம்பிறவி, Thambiravi - தம் பிறப்பாகிற அம் சிறை, Am sirai - உறுதியான பந்தத்தில் நின்றும் அறுவர், Aruvar - நீங்கப் பெறுவர்கள். |