| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2708 | திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) பிரிவாற்றாமையோடு கூடியிருக்கின்ற பராங்குசநாயகி “பிரிந்தாரிரங்குவது நெய்தல் நிலத்திலே” என்ற தமிழர்களது கொள்கையின்படி இப்போது நெய்தல் நிலத்திலே யிருக்கின்றாளென்று கொள்ள வேணும் 1 | அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1 | am siraiya,அம் சிறைய - அழகிய சிறகுகளை யுடைய madam,மடம் - இளமை தங்கிய (அல்லது, விதேயமான) naray,நாராய் - நாரைப் பறவையே! aliyathai,அளியத்தாய் - தயை பண்ணுதற்கு உரியாய்! niyum,நீயும் - நீயும் nin,நின் - உன்னுடைய am siraiya sevalum aai,அம் சிறைய சேவலும் ஆய் - அழகிய சிறகுகளை யுடைய ஆணுமாய் (இருவருங்கூடி) avan,அவன் - அந்த எம்பெருமான் van siraiyil vaikkil,வன் சிறையில் வைக்கில் - கடினமான சிறையிலே வைத்திட்டால் aa endru enakku aruli,ஆஆ என்று எனக்கு அருளி - ஐயோவென்று என் விஷயத்தில் கருணை கூர்ந்து vemsirai pul uyarntharku,வெம்சிறை புள் உயர்ந்தார்க்கு - விரோதி பயங்கரமான சிறகுகளை யுடைய பெரிய திருவடியைக் கொடியாக வெடுத்த பெருமானுக்கு en vidu thootu aai,என் விடு தூது ஆய் - என்னால் விடப்பட்ட தூதாய் sendrakal,சென்றக்கால் - போனால், vaippundal,வைப்புண்டால் - அதை நீ அநுபவித்திருப்பாயானால் en seyyum,என் செய்யும் - என்ன கெடுதலுண்டாகும்? |