| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2709 | திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாடடில் நாரையைத் தூது போகுமாறு இரத்த தலைவி, அங்குப் போனால் சொல்ல வேண்டிய செய்தியைச் சில குயில்களுக்குச் சொல்லுகின்றாள். ஒருவரை யழைத்து விட்டு மற்றொருவர்க்கும் ஸமாச்சாரஞ் சொல்லுகிற விதனால் மிக்க கலக்கம் விளங்கும். இத்தகைய கலக்கத்தை யுண்டு பண்ணுவதே யாயிற்று விஷயாந்தரங்களிக் காட்டில் பகவத் விஷயத்திற்குண்டான ஏற்றம். 2 | என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய் என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2 | inam kuyil kaal,இனம் குயில் காள் - கூட்டமான குயில்களே! en,என் - என்னுடைய seyya thaamarai kan,செய்ய தாமரை கண் - செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடைய perumaanukku,பெருமானுக்கு - எம்பெருமானுக்கு en thootu aay,என் தூது ஆய் - நான் விட்ட தூதாகி uraithakkaal,உரைத்தக்கால் - சென்று சமாசாரமறிவித்தால் en seyyum,என் செய்யும் - (அந்தச் செயல் உங்களுக்கு என்ன தீமையை விளைவிக்கும்? neer alire,நீர் அலிரே - (நெடு நாளாகப் பழகிப் போந்த) நீங்களல்லீர்களோ? mun seytha,முன் செய்த - முற்பிறப்பில் பண்ணின muzhuvinaiyaal,முழுவினையால் - பெரும் பாவத்தினால் thiruaṭi keel,திருஅடி கீழ் - திருவடிகளிலே kutreval seyya,குற்றேவல் செய்ய - கைங்கரியம் பண்ணுவதற்கு mun muyaladhen,முன் முயலாதேன் - முன்னம் முயற்சி செய்யாத நான் inam,இனம் - இன்னமும் agalvadhuvo vidhi,அகல்வதுவோ விதி - விலகி யிருப்தேயோ முறைமை? |