| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2710 | திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாட்டில் “முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல், முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே” என்றதற்கு மேல் ‘ஆழ்வீர்! இங்ஙனஞ் சொல்வது தகாது, செய்த பாபம் அனுபவித்தே தீரவேண்டுங்காணும்’ என்று எம்பெருமான் திருவுள்ளமாகக் கூடுமென்று கருதி, ‘நான் பன்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது? என்று சொல்லுங்கோள்’ என்று சில அன்னங்களைக் குறித்துச் சொல்லுகிற பாசுரம் இது 3 | விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள் மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3 | vidhiyinaal,விதியினால் - பாக்ய வசத்தினால் pedai manakkum,பெடை மணக்கும் - பேடையோடு கூடிக் களித்திருக்கின்ற mel nadaiya,மெல் நடைய - மெல்லிய நடையை யுடைய kalvarku,கள்வர்க்கு - கபடமுடைய பெருமானுக்கு, madhiyilen,மதியிலேன் - புத்தியில்லாத என்னுடைய val vinaiye maalaathu,வல் வினையே மாளாது - பெரிய பாவந்தானே முடியாதிருப்பது! endru,என்று - என்று சொல்லி, annangal,அன்னங்காள் - அன்னப் பறவைகளே! madhiyinaal,மதியினால் - புத்தியினால் kurai maan aay,குறள் மாண் ஆய் - வாமந ப்ரம்மசாரியாய் ulaga irandha,உலக இரந்த - உலகங்களை யாசித்த oruthi,ஒருத்தி - ஒரு பெண்ணாவள் madhi ellaam ul kalangi,மதி எல்லாம் உள் கலங்கி - புத்தி முழுதும் அடி மண்டி யோடே கலங்கப் பெற்று mayangum,மயங்கும் - அறிவழிந்து கிடக்கின்றாள் aal,ஆல் - அந்தோ! enneer,என்னீர் - என்று சொல்லுங்கோள். |