Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2712 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2712திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) நான் எக்கேடாவது கெட்டுப்போகிறேன்; நாராயணனென்றும் ஸகல லோக ஸம்ரக்ஷகனென்றும் விருது சுமக்கின்ற அவர்க்கு ஒரு கெடுதல் இல்லாமலிருக்க வேண்டுமே; என்னொருத்தியை ரக்ஷியாமையினாலே, அவர் படைத்த பெயரெல்லாம் மழுங்கிப் போகுமன்றோ; அங்ஙனம் போகாமே நோக்கிக் கொள்ளும்படி சொல்ல வேணுமென்று ஒரு குருகை நோக்கி இரக்கின்றாள். ஒருவடைய அபேக்ஷையையும் எதிர்பாராமல் உலகங்களுக்கெல்லாம் அபீஷ்டங்களை அளிக்கின்றாரே; அப்படிப்பட்டவர் பாவியான எனக்குத் தானே உதவலாகாது. அவர் நாராயணரன்றோ. நார பதத்தின் அர்த்தத்தில் நான் சேர்ந்தவளல்லேனோ? என்னை விட்டால் அவர்க்கு நாராயணத்வம் எங்ஙனே நிரம்பும்? என்ற கருத்து உள்ளுறையும். 5
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5
malgu,மல்கு - நிறைந்த
neer,நீர் - குளிர்ச்சியாகிய ஸ்வபாவத்தையுடைய
punal,புனல் - நீர்வாய்ந்த
padappai,படப்பை - பூந்தோட்டங்களிலே
iraidther,இரைதேர் - இரை தேடுகின்ற
van siru kuruke,வண் சிறு குருகே - அழகிய சிறிய குருகே!.
thaann nalgi,தான் நல்கி - தானே அநுக்ரஹித்து
kaathu,காத்து - அநிஷ்டங்களையெல்லாம் போக்கி
pozhil ezum,பொழில் எழும் - ஏழுலகங்களையும்
alikkum,அளிக்கும் - ரக்ஷித்துக் கொண்டிருக்கின்றானெம்பெருமான்;
vinaiyeerkaeyo nalgathaanaa aagaaathu,வினையேற்கேயோ நல்கத்தான் ஆகாது - (அப்படிப்பட்ட அவன்) பாபியான எனக்கு மாத்திரமேயோ தான் கிருபை பண்ணலாகாது;
naarannanai kandakkaal,நாரணனை கண்டக்கால் - (அந்த) நாராயணனை கண்ட பொழுதில்,
malgum neer kannaeerku,மல்கும் நீர் கண்ணேற்கு - நீர் நிறைந்த கண்களை யுடைய (அழு கண்ணியான) எனக்கு
or vaasagam kondoo,ஓர் வாசகம் கொண்டு - (அப்பெருமாளிடத்தில் நின்று) ஒரு வார்த்தையைக் கொணர்ந்து
arulaay,அருளாய் - கிருபை பண்ண வேணும்