Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2713 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2713திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) என்னுடைய வருத்தத்தைப் பரிஹரியாதொழிந்தாலும், தம்முடைய நாராயணத்வத்தையாவது காப்பாற்றிக்கொள்ளச் சொல்ல வேணுமென்றாள் கீழ்ப்பாட்டில்; இதற்கு எம்பெருமான் ‘நம்முடைய நாராயணத்வம் தொலைந்தாலும் தொலையட்டும்; ஒருவிதத்திலும் நமக்கு ஈடல்லாத இந்தப் பராங்குசநாயகியோடு கலந்து அவத்யம் பொறுவதிற்காட்டிலும் நாராயணத்வம் அழிய நிற்பதே அமையும் என்று திருவுள்ளமாகக் கூடுமென்று கருதிய தலைவி, அவருக்கும் அவத்யம் வராமல் எனக்கும் ஸத்தை கிடக்கும்படியாக ஒரு வழியுண்டு; தாம் திருவீதி உலாவப்புறப்படுதல், ஆனைக்கு அருள் செய்ப்புறப்படுதல், என்றிப்படிப் சில யாத்திரைகள் செய்வதுண்டே; அப்படி ஏதேனுமொரு வியாஜங்கொண்டு எங்கள் தெருவே போனால் தமக்கும் அவத்யம் வாராது. நானும் சாலக வாசல் பற்றி நோக்கி ஜீவிப்பேன்; இதை அவர்க்குச் சொல்லாய் என்று ஒரு வண்டை இரக்கிறாள் 6
அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6
Aazhi vazhi vandae,ஆழி வழி வண்டே - வட்டமான ரேகைகளை யுடைய வண்டே!
Arul aazhi ammaanai,அருள் ஆழி அம்மானை - அருட்கடலான எம்பெருமானை
Kandakkaal,கண்டக்கால் - காணும் பொழுது (அவரை நோக்கி)
Arulaadha neer,அருளாத நீர் - (இவ்வளவில்) கிருபை பண்ணாத நீர்
Aruli,அருளி - கிருபை பண்ணி
Avar aavi thuvara mun,அவர் ஆவி துவரா முன் - அவருடைய (ஆழ்வாருடைய) உயிர் நீர்மை கெடுவதற்கு முன்னே
Arul aazhi pul,அருள் ஆழி புள் - கருணைக் கடலான பெரிய திருவடியை
Avar veedhi orunaal,அவர் வீதி - அவரிருக்கிற வீதியில்
Orunaal,ஒருநாள் - ஒரு நாளாயினும்
kadaveer endru,கடவீர் என்று - நடத்துவீராக என்று
Idhu solli,இது சொல்லி - இந்த வார்த்தையைச் சொல்லி
arul,அருள் - கிருபை பண்ண வேணும்;
Yaamum,யாமும் - நாமும்
En pilaitthoom,என் பிழைத்தோம் - என்ன குற்றம் செய்தோம்?