| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2714 | திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) (என் பிழை கோப்பதுபோல.) இத்திருவாய் மொழிக்கு இப்பாட்டு உயிர் நிலையாயிருக்கும். பிழைகளைப் பொறுத்தருளுந் தன்மையாகிற அபராத ஸஹத்வமென்னுங் குணம் பற்றாசாகத் தூது விடுகிறாளென்று அவதாரிகையிற் கூறினது இப் பாட்டைக் கணிசித்தேயாம். பிழைகளை அளவின்றிச் செய்துவைதபுது ‘அருளாழிப்புட்கடவீர் அவர்வீதி யொருநாள்’ என்றால் இது எப்படி ஸாத்யமாகும்? என்று எம்பெருமானுக்குக் கருத்தாகக் கூடுமென்று நினைத்த பராங்குசநாயகி, எங்கள் குற்றத்தை மாத்திரமேயோ பார்ப்பது. குற்றங்களைப் பொறுத்தருள்பவர் என்று அவர் தாம் விருது பெற்றிருக்கின்றாரே, அதனைச் சிறிது பார்க்க வேண்டவோவென்று சொல்” என்று தன்கிளியை இரக்கின்றாள். 7 | என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல் என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7 | Enbu,என்பு - எலும்பிலே Izhai,இழை - நூலிழையை Koappathu pol,கோப்பது போல் - நுழைத்தாற்போல Pani vaadai,பனி வாடை - குளிச்சி பொருந்திய வாடைக் காற்று Eerkinra,ஈர்க்கின்ற - வருத்துகின்றது; En,என் - (இப்படி வருத்தப் படுகின்ற) என்னுடைய Pizhaiye,பிழையே - குற்றங்களையே Ninaintharuli,நினைந்தருளி - எண்ணி Oruvaai,ஒருவாய் - ஒரு வார்த்தை Sol,சொல் - சொல்ல வேணும்; Enbu,என்பு - எலும்பை Izaikkum,இழைக்கும் - செதுக்குகிற Arulaadha,அருளாத - கிருபை பண்ணாமலிருக்கிற Thiru maalaarkku,திரு மாலார்க்கு - லக்ஷ்மீ நாதனுக்கு (லக்ஷ்மீ நாதனிடம் சென்று) Thiruvadiyin,திருவடியின் - ஸ்வாமியான தேவரீருடைய Thakavinukku,தகவினுக்கு - கிருபைக்கு (பாங்காகும்படி) En pizhaitthaal endru,என் பிழைத்தாள் என்று - (பராங்குச நாயகி) என்ன பிழை செய்து விட்டாள்? என்று Ila kiliye,இள கிளியே - கிளிப்பிள்ளாய்! Yaan valartha nee alaiye,யான் வளர்த்த நீ அலையே - நான் வளர்த்த நீ அல்லையோ? (வேறு பட்டாயோ) |