| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2715 | திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) தன்னுடைய நிலைமையைப் பூவென்னும் ஒரு பக்ஷிக்குக் காட்டி ‘ஏற்கெனவே உன்னை நான் வேண்டிக்கொண்டிருக்கும் எனக்காகத் தூது செல்லாதே உபேஷித்திருப்பாய்; நானோ இப்போது முடியப் புகா நின்றேன்; இனிமேல் உனக்கு இரையிடுவாரை நீயே தேடிக்கொள்ளாய் என்று சரம ஸமயத்தில் வார்த்தைபோல சொல்லுகின்றாள் 8 | நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய் நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய் சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8 | Siru poovaai,சிறு பூவாய் - சிறிய பூவையே! Nee alaiye,நீ அலையே - நீ அல்லவோ? (இப்போது வேறுபட்டாயோ?) Nedumaalaarkku,நெடுமாலார்க்கு - ‘புருஷோத்தமனுக்கு En thoodu aay,என் தூது ஆய் - என் தூதாகிச் சென்று Enathu noi,எனது நோய் - எனது பிரிவாற்றாமையை Nuval enna,நுவல் என்ன - ‘சொல்’ என்று வேண்டச் செய்தேயும் Nuvalaadhe,நுவலாதே - (போய்ச்) சொல்லாதே Irundhozhindhaay,இருந்தொழிந்தாய் - வாளா இருந்திட்டாய், Naan,நான் - யான் Saayalodu,சாயலொடு - ஒளியோடு கூடின Mani maamai,மணி மாமை - அழகாகிய நிறத்தை Thalarndhaen,தளர்ந்தேன் - இழந்தேன்; Ini,இனி - இப்படியான பின்பு Unadhu,உனது - உன்னுடைய Vaai alagil,வாய் அலகில் - வாயலகுக்குள்ளே In,இன் - மதுரமான Adisil,அடிசில் - இரையை Vaipparai,வைப்பாரை - ஊட்ட வல்லவர்களை Naadaay,நாடாய் - தேடிக் கொள் |