| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2716 | திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாட்டில் “சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான்” என்றாரே. அப்படி மேனி மெலிந்திருக்கிற ஸமயத்திலே ஒரு வாடைக் காற்று வந்து உடம்பிலே பட்டது; “என்றும் புன்வாடை: யிதுகண்டறிதுமிவ்வாறு வெம்மை, ஒன்று முருகவுஞ் சுவடுந் தெரியலம்” (திருவிருத்தம்) என்றாப்போலே அதனுடைய அபூர்வமான கொடுமையைக் கண்டு அரசர்கள் ராஜ த்ரோஹஞ் செய்தவர்களை ஹிம்ஸிக்க வேற்காரை அனுப்பி யிருக்க வேணும்’ என நினைத்து அந்த வாடையை நோக்கிச் சொல்லுகின்றாள்- ‘ வாடையே! நான் சொல்லுகிறவொரு வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்து விட்டு, பின்னை அவசியம் வந்து என்னை முடித்திடாய்’ என்கிறாள். 9 | நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9 | Oodu aadu,ஊடு ஆடு - அங்குமிங்கும் நடையாடுகிற Pani vaadaay,பனி வாடாய் - குளிர் காற்றே! Naadaatha malar naadi,நாடாத மலர் நாடி - தேட வொண்ணாத புஷ்பங்களைத் தேடி Naal thoarum,நாள் தோறும் - தினந்தோறும் Naaranan than,நாரணன் தன் - ஸ்ரீமந் நாராயணனுடைய Vaadaadha malar adi keezh,வாடாத மலர் அடி கீழ் - வாடாத தாமரை மலர் போன்ற திருவடிகளில் Vaikkave,வைக்கவே - ஸமர்ப்பிப்பதற்காகவே Vagukkinra,வகுக்கின்ற - (அவயங்களை) ஏற்படுத்தி யிருக்க, Veetu aadi veettrindhal,வீடு ஆடி வீற்றிருந்தல் - (இப்படி) பிரிவிலே மூழ்கி யிருப்பதாகிற Vinai yatradhu,வினை யற்றது - தௌர்பாக்கியம் En seyvadho,என் செய்வதோ - எதற்காக நேர்ந்ததோ!; Vaadaay,வாடாய் - காற்றே! Uraiththaeraay,உரைத்தீராய் - (அப் பெருமானுக்குத்) தூது சொல்லி (அனுகூலமான மறு மொழி பெறா விடின்) Enathu udal,எனது உடல் - என் சரீரத்தை Eeraay,ஈராய் - இரு பிளவாக்கி விடு |