| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2717 | திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாட்டில் “நாரணன்றன் வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று” என்று கைங்கரிய ப்ரஸ்தாவம் வந்ததனால், தாய் முலையை நினைத்த கன்று போலே திருவுள்ளமானது பதறி உடலை விட்டுப் புறப்படத் தொடங்கிற்று; அதனை நோக்கி நெஞ்சே! நம் காரியம் ஒரு விதமாக சபலமாகுமளவும் நீ என்னை விடாதே யிருக்கவேணு’ மென்று கேட்டுக் கொள்ளுகிறாள். அன்றியே, தூதுவிடுகிற பிரகரணமாதலால் நெஞ்சைத் தூதுவிடுகிறாள் என்பாரு முளர். அப்போது, விடல் என்றது- அவனை விடவேண்டா என்றபடி 10 | உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய் கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10 | Aazhi mada nenje,ஆழி மட நெஞ்சே - ஆழ்ந்த மடநெஞ்சே! Udal,உடல் - சரீர ஸம்பந்தம் பெற்று Aazhi,ஆழி - சக்ராகாரமாக Pirappu,பிறப்பு - மாறி மாறிப் பிறக்கிற ஸம்ஸாரி நிலமும் Veetu,வீடு - மோக்ஷமும் Uyir,உயிர் - (இவற்றை அடைவதற்கு உரிய) ஆத்மாவும் Mudhal aam mutrum aay,முதல் ஆம் முற்றும் ஆய் - ஆகிய இவை முதலான ஸகல பதார்த்தங்களும் தானிட்ட வழக்காம்படி ஸர்வ நிர்வாஹகனாய் ஆழ்ந்த நீரை யுடைய ஸமுத்திரத்திலே Thootri,தோற்றி - ஆவிர்ப்பவித்து Adhan ullam,அதன் உள்ளே - அக் கடலினுள்ளே Kan valarum,கண் வளரும் - சயனித் தருள்கின்ற Adal vizhi ammaanai,அடல் வழி அம்மானை - தீக்ஷ்ணமான சக்கரப் படையை யுடைய பெருமானை Kantakkaal,கண்டக்கால் - கண்டால் Idhu,இது - இந்த நிலைமையை Solli,சொல்லி - அவனுக்குச் சொல்லி Vinaiyom,வினையோம் - பாபிகளாக நாம் Ondru aam alavu,ஒன்று ஆம் அளவு - அவனோடு ஒன்றுபடும் வரையில் Vidal,விடல் - விடாதே. |