| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2718 | திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது. இத் திருவாய்மொழியில் சொல் மாத்திரத்தைக் கற்றாலும் திருநாட்டைப் பெறுதற்குப் போதும் என்கிறார். 11 | அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின் வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11 | Alavu iyanra,அளவு இயன்ற - எல்லையைக் கடந்த Ezh ulagathavar perumaan,ஏழ் உலகத்தவர் பெருமான் - ஏழுலகங்களிலுமுள்ள சேதநர்களுக்கும் தலைவனான Kannanai,கண்ணனை - எம்பெருமானைக் குறித்து, Valam vayal soo,வளம் வயல் சூழ் - வளர்ப்ப முள்ள கழனிகள் சூழ்ந்த Van kurukoor,வண் குருகூர் - அழகிய திருநகரிக்குத் தலைவராகிய Sadagopan,சடகோபன் - ஆழ்வார் Vainthu uraitha,வாய்ந்து உரைத்த - அன்பு பூண்டு அருளிச் செய்த Alavu iyanra,அளவு இயன்ற - கட்டளைப் பட்ட (ஸகல லக்ஷண ஸம்பந்தமான) Andhaathi,அந்தாதி - அந்தாதித் தொடையான Aayiraththul,ஆயிரத்துள் - ஆயிரத்துக்குள்ளே Ippaththin,இப் பத்தின் - இப் பதிகத்தினுடைய Valam uraiyaal,வளம்உரையால் - வளமாகிய சொல்லளவினாலே Vaan oongu peruvalam,வான் ஓங்கு பெருவளம் - பரம பதத்தில் சிறந்த செல்வமாகிய கைங்கரிய ஸம்பத்து Peral aagum,பெறல் ஆகும் - அடையலாகும் |