திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2719 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2719திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (அயர்வறுமமரர்களென்றிருக்கும் நித்யஸூரிகளாலே அநுபவிக்கத் தக்கவனான எம்பெருமானை அந்தோ! நான் மனமொழி மெய்களினால் தூஷித்து விட்டேனே யென்கிறார்) 1
வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன் களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும் தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1
பதவுரை Show / Hide
வளம்,Valam - வளப்பம் பொருந்திய
ஏழ் உலகின்,Ezh ulagin - ஏழுலகத்திற்கும்
முதல் ஆய்,Mudhal aay - முதலாகிய
வானோர் இறையை,Vaanoor iraiyai - நித்ய ஸூரி நாதனான எம்பெருமானை
அரு வினையேன்,Aru vinaiyen - போக வொண்ணாத பாபத்தை யுடையோனாகிய நான்
நினைத்து,Ninaithu - மனத்தினால் தியானித்து
நைந்து,Nainthu - உடம்பும் கட்டுக் குலைந்து
களவு ஏழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்,Kalavu ezh vennay thodu unda kalvaa enpan - களவுத் தொழில் விளங்கும்படி வெண்ணெயை ஒளித்துண்ட கள்வனே!’ என்று சொல்லி யழைக்கின்றேன்;
பின்னையும்,Pinnaiyum - அதற்கு மேலும்
தளவு ஏழ் முறுவல்,Thalavu ezh muruval - முல்லை யரும்பு போலத் தோன்றுகிற புன்னகையை யுடைய
பின்னைக்கு ஆய்,Pinnai kku aay - நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஆனாயர் தலைவன் ஆய்,Val aanayar thalaivan aay - சிறந்த இடையர் தலைவனாய் வந்து
இள,Ila - இளமை தங்கிய
ஏறு ஏழும்,Eru ezhum - எருதுகளேழையும்
தழுவிய,Thazhuvia - அணைத்து முடித்த
எந்தாய்,Endhaay enpan - என் ஸ்வாமியே!
என்பன்,enban - என்றும் சொல்லுவேன்