| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2721 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ் இரண்டு பாட்டிலும் எல்லை கடந்த நைச்சியத்தை அநுஸந்தித்து அகலப் பார்த்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! நீர் இங்ஙனம் நம்முடைய மேன்மையைப் பார்த்து நெகிழ நினைத்தல் தகுமோ? நம்முடைய மேன்மையை மாத்திரமேயோ நீர் பார்ப்பது? நாம் எல்லாரோடும் கலந்தும் தாழ நின்றும் பொருந்தும் படியான சீலகுணத்தையும் பார்க்கவேண்டாவோ?’ என்று தனது சீலகுணத்தைக் காட்டும் முகமாக உலகளந்த வரலாற்றை நினைப்பூட்ட, அதனை அநுஸந்தித்து அகலவும் மாட்டாமல் அணுகவும் மாட்டாமல் நடுவே நின்று பேசிப் போது போக்குகிறபடியாய்ச் செல்லுகின்றது இப்பாசுரம். 3 | மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும் நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன் சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3 | மா யோனிகள் ஆய்,Maa yonigal aay - பெருமை யுள்ள பிறப்பை யுடையவர்களாய்க் கொண்டு நடை,Nadai - ஸ்ருஷ்டி முதலான வியாபாரங்களை கற்ற,Katra - அறிந்திருக்கிற வானோர்,Vaanor - தேவர்களும் முனிவரும்,Munivarum - ரிஷிகளும் பலரும்,Palrum - மற்றும் பலருமாகிய யோனிகளை,Yonikalai - காரண பூதர்களான பிராணிகளை நீ படை என்று,Nee padai endru - நீ படைக்க கடவாயென்று நிறை நான் முத்னை படைத்தவன்,Nirai naan mudhnai padaithavan - (ஞான சக்திகள்) நிறைந்த சதுர்முகனை ஸ்ருஷ்டித்தவன் எல்லா அறிவுக்கும் சேயோன்,Ella arivukkum seyon - எல்லா ஞானத்துக்கும் எட்டாதவன் திசைகள் எல்லாம்,Thisaigal ellaam - ஸகல லோகங்களையும் திரு அடியால்,Thiru adiyaal - திருவடியினால் தாயோன்,Thaayon - அளந்தவன் எல்லாவெவ் வுயிர்க்கும்,Ellavev uyirkkum - எவ் வகைப் பட்ட ஸகலமான பிராணிகளுக்கும் தாயோன்,Thaayon - தாயைப் போன்றவன்; தான்,Thaan - இப்படிப் பட்ட எம்பெருமான் ஓர் உருவனே,Oar uruvane - (ஸுசீல்ய மாகிற) ஒரு படியை யுடையவனா யிருக்கின்றானே! |