திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2723 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2723திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இப்பாட்டுக்கு இரண்டுவகையான அவதாரிகை கூறுவர்; முதலிற் பண்ணின நைச்சியாநுஸந்தானம் தலை மடிந்து எம்பெருமான் விஷயத்திலே சிறிது ஆபிமுக்கியத்தைக் கீழ்ப் பாசுரத்திற்காட்டின ஆழ்வார் என்னை ஏவி அடிமை கொள்ளவேணுமென்று இப்பாட்டில் பிரார்த்திக்கின்றாரென்பது ஒரு அவதாரிகை ஆழ்வார்க்கு இப்போதுண்டான ஆபிமுக்கியம் நிலைத்திருக்கவேணுமென்றும். இவரைத் துடிக்கவிட்டே சேர்த்துக்கொள்ள வேணுமென்றுங் கருதிய எம்பெருமான் முகங்காட்டாதே மறைய நிற்க, அது தாளாமல் ‘அருவாய்’ என்று பிரார்த்திக்கிறாரென்பது மற்றொரவதாரிகை.) 5
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5
பதவுரை Show / Hide
மான் ஏய் நோக்கி மடவாளை,Maan Aye nokki madavaalai - மானை நிகர்த்த பார்வையை யுடையவளாகிய பெரிய பிராட்டியை;
மார்பில் கொண்டாய்,Maarbil kondai - திரு மார்பிலே உடையனாய் (அது காரணமாக)
மாதவா,Madhava - மாதவனென்ற திரு நாமம் பெற்றவனாய்
கோவிந்தா,Govindha - கோவிந்தனே!
வான் ஆர் சோதி,Vaan aar sodhi - வானுலகம் இடமடையும் படியான ஒளியை யுடைய
மணிவண்ணா,Manivanna - நீலமணி போன்ற நிறமுடையவனே!
மதுசூதா,Madhusoodha - மதுவென்னு மசுரனைக் கொன்றவனே
கூனே சிதையா,Koone sidhaiya - (கூனியின்) கூன் ஒன்றே நிமிரும்படி (மற்ற ஒரு அவயவத்திற்கும் வாட்ட முண்டாகாதபடி)
உண்டை வில் நிறத்தில்,Undai vil Nirathil - சுண்டு வில்லை நிமிர்க்கிற ரீதியிலே (சிறிதும் சிரமமின்றி)
தெறித்தாய்,Theirthai - நிமிர்த்தவனே!
நீ,Nee - நீ
உன்,Un - உன்னுடைய
தேனே மலரும் திரு பாதம்,Thene malarum thiru paadham - தேனோடு கூடி மலர்கின்ற திருவடித் தாமரைகளை
வினையேன்,Vinaiyaen - பாபியான நான்
சேரும் ஆறு,Seerum aaru - கிட்டுப் படியாக
அருளாய்,Arulaay - கிருபை பண்ண வேணும்