திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2726 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2726திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இப் பாட்டின் ஸந்நிவேசத்தை ஊன்றி நோக்குமிடத்து எம்பெருமானுக்கும் ஆழ்வார்க்கும் விநோதமான வொரு ஸம்வாதம் நிகழ்ந்தமை நன்கு புலப்படும். கீழ்ப்பாட்டில் எல்லைகடந்த நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பின்வாங்கின ஆழ்வாரை எம்பெருமான் நல்லதொருபாயத்தினால் தன்னோடு பொருந்தவிட்டுக் கொள்ளவேணுமென்று பார்த்து அவரோடே பேசத் தொடங்கினான்.) 8
உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8
பதவுரை Show / Hide
மாயோனே,Maayone! - ஆச்சரிய குண சேஷ்டிதங்களை யுடையவனே!
உலகு ஏழ்,Ulagu yezl - ஏழுலகங்களையும்
முன்னமே உண்டாய்,Munnamae undaay - முற்காலத்திலே திருவயிற்றிலே வைத்தாய்;
உமிழ்ந்து,Ummilntu - அவற்றை வெளிப்படுத்தி
சிறு மனிசர்,Siru manisar - அற்ப மனிதருடைய
உவலை,Uvalai - அருவருப்பான
யாக்கை நிலை,Yaakkai nilai - உடம்பினது நிலைமையை
எய்தி,Eythi - அடைந்து
மாயையால் புக்கு,Maayaiyaal pukku - மாயையினால் இவ்வுலகில் வந்து சேர்ந்து
வெண்ணெய்,Vennney - வெண்ணெயை
உண்டாய்,Undaay - அமுது செய்தாய்;
மண் தான் சோர்ந்தது உண்டேனும்,Mann thaann soarendhadhu undaenum - (திருவயிற்றிலே) மண் சட்டிகள் மிச்சப்பட்டிருந்தாலும்
மனிசர்க்கு,Manisarkku - மனிதர்கட்டு
ஆகும்,Aagum - உண்டாகக்கூடியதான
பீர்,Beer - வெள்ளை மாந்தம்
சிறிதும்,Sirithum - அற்பமும்
அண்டாவண்ணம்,Andhavaannam - சேராதிருக்கும்படி
மண் கரைய,Mann karaiya - அந்த மண்கட்டிகள் கரைவதற்கு
நெய் ஊண் மருந்தோ,Nei oon marundho - நெய் அமுது செய்தது மருந்தோ? (அல்ல.)