| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2727 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டில் எம்பெருமான் வெண்ணெயின் ப்ரஸ்தாவமெடுத்து ஆழ்வார் வாயை மூடுவித்தானே; அதற்குமேல் ஆழ்வார்- ‘எம்பெருமானே! திருவாய்ப்பாடியில் வெண்ணெய் உனக்குப் பரமயோக்யமென்பது மெய்யே; ஒப்பற்ற பரிவுடைய யசோதைப்பிராட்டி முதலானாருடைய வெண்ணை யாகையாலே அஃது உனக்கு அமுதமாயிருக்கும்; பாபியான என்னுடைய ஸம்பந்தம் உனக்கு விஷயமாயிருக்குமே, என்றார்; அது கேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! அப்படி விஷமானாலும் நமக்குக் குறையில்லை காணும்; பூதனையின் கதை உமக்குத் தெரியாமையில்லையே; அவளுடைய விஷமும் நமக்கு அமுதமாயிற்றன்றோ; அதுபோலவே உம்மால் விஷமென்று நினைக்கப்படுவதும் எனக்கு அமுதமேயாகத் தடையில்லை’ என்று சொல்லிக் கொண்டு ஆழ்வாரது திருமேனியை மேல் விழுந்து கைக்கொள்ள 9 | மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும் தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9 | தீய,Theya - கொடிய நினைவை யுடையவளாய் அலவலை,Alavalai - பஹு ஜல்பிதங்களை யுடையவளாய் பெரு மா வஞ்சம்,Peru maa vanjam - மிகப் பெரிய வஞ்சகையான பேய்,Pei - பூதனை யானவள் வீய,Veya - முடியும்படி தூய் குழவி ஆய,Thooy kulavi aaya - பசுங்குழந்தையாகி விடம்பால் அமுது ஆ,Vidampal amuthu aa - (அந்தம் பூதனையின்) விஷங்கலந்த பால் அமிருதமாம்படி அமுது செய்திட்ட,Amuthu seydhita - அமுது செய்த மாயன்,Maayan - ஆச்சரிய ஸ்வபாவனுடன் வானோர் தனி தலைவன்,Vaanor thani thalaivan - நித்ய ஸூரிகளுக்கு அத்விதீய நாதனும் மலராள் மைந்தன்,Malaral maindhan - திருமகள் கொழுநனும் எவ் உயிர்க்கும் தாயோன்,Ev uyirkkum thaayon - எல்லா வுயிர்களுக்கும் தாய் போன்றவனும் தம்மான்,Thammaan - தனக்குந்தானே ஸ்வாமியும் என் அம்மான்,En ammaan - எனக்கு ஸ்வாமியும் அம்மா மூர்த்தியை,Amma moorthiyai - அப்படிப்பட்ட மேலான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான பெருமானை சார்ந்து,Saarndhu - கிட்டி மாயோம்,Maayom - இருவரும் மாயாது வாழக்கடவோம். |