திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2728 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2728திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டைத் திருச்செல்வி சார்த்தின் எம்பெருமான் “அம் மாமூர்த்தியைச் சார்ந்து மாயோம்” என்ற வுறதியையறிந்து திருவுள்ளம் பூரித்து, எப்போதும் விட்டுப் பிரியகில்லாத திருநாட்டிலே இவ்வாழ்வாரைக் கொண்டுபோய் நித்யாநுபவம் பண்ணக்கருதி, ஒரு புதுமையுஞ் செய்ய வேண்டாதபடியான பரமபதத்தையும் தமக்காக அவன் கோடிக்கப்புக்கதைக் கண்டு ஈதென்ன வ்யாதோஹமோ! என்று ஈடுபடுகிறாரிதில்.) 10
சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10
பதவுரை Show / Hide
சார்ந்த,Saarndha - சேர்ந்திருக்கிற
இரு வல் வினைகளும்,Iru val vinai kalum - (புண்ய பாப ரூபங்களான இருவகைப் பட்ட வல் வினைகளையும்
சரிந்து,Sarindhu - தொலைந்து
மாயம் பற்று அறுத்து,Mayam patru aruthu - அஜ்ஞாந காரியமான விஷய ஸங்கத்தையும் தவிர்த்து
தன்பால் தீர்ந்து மனம் வைக்க திருத்தி,Thanpal theerndhu manam vaikka thiruthi - தன்னிடத்திலே உறுதி கொண்டு நெஞ்சைப் பொருந்த வைக்கும்படி என்னைத் திருத்தி
வீடு திருத்து வான்,Veetu thiruthu vaan - (எனக்குத் தருவதாக மோக்ஷ ஸ்தானத்திலும் சில : திருத்தங்களைச் செய்து ஒழுங்கு படுத்துவதாக ஆரம்பித்துவிட்டான்;
ஆர்ந்த,Aarndha - பரி பூர்ணமான
ஞானம் சுடர் ஆகி,Gnaanam sudar aagi - (ஸ்வயம் ப்ரகாச) ஞான வொளியை யுடையனாய்
அகலம் கீழ் மேல் அளவு இறந்து,Agalam keel mel alavu irandhu - சுற்றும் கீழும் மேலும் எல்லை யற்று எங்கம் வியாபதித்தவனாய்
நேர்ந்த,Neerndha - மிகவும் நுட்பமான
உருஆய் அரு ஆகும் இவற்றின்,Uraay aru aagum ivattrin - அசித்தும் சித்துமாகிற இந்தப் பொருள்களுக்கு
உயிர் ஆம்,Uyir aam - அந்தர்யாமியாகி நிற்கிற
நெடு மால்,Nedumal - வ்யாமோஹமே வடிவான எம்பெருமான்.