| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2729 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்பார்க்கு ஒருவகைத் துன்பமும் நேரிடாதென்று பயனுரைத்துத் தலைகட்டுகிறார். எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவர ‘நான் அயோக்யன்’ என்ற அகன்று தாம் பட்ட வருத்தங்கள் இத் திருவாய்மொழி கற்பார்க்கு உண்டாக்கமாட்டாவென்றவாறு.) 11 | மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன் பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11 | மாலே,Maale - பெரியோனே! மாயம் பெருமானே,Mayam perumane - ஆச்சரிய குண நிதியே! மா மாயனே,Ma mayane - மஹத்தான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே! என்று என்று,Endru endru - என்று இங்ஙனம் பல விதங்களான திருநாமங்களைச் சொல்லி மாலே ஏறி,Maale yēri - பித்தம் பிடித்து மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன்,Maal arulaal mannu kurukoor sadagopan - ஸர்வேச்வரனது க்ருபையினால் பொருந்தப் பெற்ற திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் பால் ஏய் தமிழர்,Paal aay thamizhar - (அருளிச் செய்ததான) பாலுக்குச் சமானமான இனிமை யுள்ள தமிழில் வல்லவர்களென்ன இசைகாரர்,Isaikaarar - இசையறிந்து பாடவல்லவர்களென்ன பத்தர்,Pathtar - பக்திமான்களென்ன ஆகிய இவர்களல்லாரும் பரவும்,Paravum - கொண்டாடும்படியமைந்த ஆயிரத்தின் பால்,Aayirathin paal - ஆயிரம் பாட்டினுள் பட்ட,Patta - தோன்றின இவை பத்தும்,Ivai pattum - இந்தப் பத்துப்பாட்டையும் வல்லார்க்கு,Vallarkku - ஓத வல்லவர்களுக்கு பரிவது இல்லை,Parivathu illai - யாதொரு துக்கமும் உண்டாக மாட்டாது. |