| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2742 | திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (கீழ்ப்பாட்டில் ‘ஐயோ! கைவல்யார்த்திகள் எம்பெருமானைப் பணிந்து க்ஷûத்ரமான பலனைப் பெற்றுப்போவதே!’ என்று அவர்களை நிந்தித்தார்; அவன்றன்னையே ஆசைப்பட்டிருக்குமவர்கள் திறத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்கிறாரிப் பாட்டில்) 2 | வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன் எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2 | அடியரை,Adiyarai - தன்னடியாரை வல்வினை,Valvinai - வலிய கருமங்களினுடைய துப்பு ஆம்,Thuppum Aam - மிடுக்கின் வழியிலே ஸஞ்சரிக்கிற புலன் ஐந்தும்,Pulan Aindhum - பஞ்சேந்திரியங்களிலும் அகப்பட்டு துஞ்சக் கொடான்,Thunjak Kodaan - நசித்துப் போம்படி விட்டுக் கொடாதவன் வைப்பு ஆம்,Vaippu Aam - (அவர்களுக்குப் புருஷர்த்தமான) நிதியுமாய் மருந்து ஆம்,Marundhu Aam - (விரோதி நிரஸந முகத்தால்) மருந்துமாவன்; அவன்,Avan - அந்த எம்பெருமான் எப்பால்,Eppaal - எவ்விடத்துமுள்ள யவர்க்கும்,Yavarkkum - யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து,Nalathaal Uyarndhu Uyarndhu - ஆனந்த குணத்தினால் மிகவும் உயர்ந்து அப்பாலவன்,Appaalavan - வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதபடி அப்புறப் பட்டவனாய் எங்கள்,Engal - எங்களுக்கு உரியவனான ஆயர் கொழுந்து,Ayar Kolunthu - ஆயர் தலைவன் |