| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2743 | திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இரண்டாம் பாட்டில் அநந்யப்ரயோஜநாதிகாரிகள் விஷயத்தில் எம்பெருமான் இருக்கும்படியையருளிச்செய்தார்; ‘ ஆக இவ்விரண்டு வகுப்பிலே நீர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்?’ என்று ஆழ்வாரைச் சிலர் கேட்க; நான் அநந்ய ப்ரயோஜநனாய் அவனைப் பற்றினேன்’ என்று நேரே சொல்ல மாட்டாமல் ‘அவனை அநுபவித்துக் கொண்டே யிருக்கச் செய்தே விரோதிகள் தன்னடையே கழிந்து போகப்பெற்றவன் நான்’ என்றாரிதில்) 3 | ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3 | ஆயர் கொழுந்து ஆய்,Ayar Kolunthu Aai - இடையர் தலைவானான கோபால க்ருஷ்ணனாகிய அவரால்,Avaraal - அவ் விடையர்களாலே புடை உண்ணும்,Putai Unnum - வெண்ணெய்க் களவு முதலியவற்றிற்றாக அடி யுண்கிற மாயம் பிரானை,Maayam Piraanai - மாயச் செயல் வல்லவனும் என்,En - எனக்கு விதேயனும் மாணிக்கம் சோதியை,Maanikkam Sodhiyai - மாணிக்கம் போல் ஒளி பெற்ற வடிவை யுடையவனும் தூய அமுதை,Thooya Amudhai - பரிசுத்தமான அம்ருதம் போன்றவனுமான பெருமானை பருகி பருகி,Parugi Parugi - இடையறாமல் அநுபவித்து என்,En - என்னுடைய மாயம்,Maayam - பிரகிருதியின் காரியமாய் வருகின்ற பிறவி,Piravi - பிறவியினாலுண்டானதாகிய மயர்வு,Mayarvu - அஜ்ஞானத்தை அறுத்தேன்,Aruthen - போக்கிக் கொண்டேன். |