| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2744 | திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (கீழ்ப்பாட்டில் “என் மாயப்பிறவி மயர்வுறுத்தேன்” என்று அருளிச்செய்த ஆழ்வாரை நோக்கி ‘ஆழ்வீர்! மாயப்பிறவி மயர்வு அறவேணு மென்பதுதானே உமது உத்தேச்யம்; அது நிறைவேறிவிட்டதாக நீரே சொல்லி விட்டீரே; இனி நீர் ஓய்ந்திருக்கமன்றோ’ என்று சிலர் சொல்ல, எம்பெருமானை எங்ஙனம் நாம் விடுவேனென்கிறார்) 4 | மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4 | மயர்வு அற,Mayarvu Ara - அஜ்ஞானம் தொலையும்படி மன் மனத்தை,Man Manathai - எனது நெஞ்சிலே தன்னினான் என்னை,Thanninaan Ennai - நித்ய வாஸஞ் செய்பவனாய் உயர்வினையே தரும்,Uyarvinaiyae Tharum - (எனக்கு) ஞான பக்தி வளர்த்தியையே தந்தருள்கின்றவனாய் ஒண் சுடர் கற்றையை,On Sudar Katraiyai - அழகிய தேஜோ ராசியாய் அயர்வு இல் அமரர்கள்,Ayarvu Il Amarargal - மறப்பில்லாத நித்ய ஸூரிகளுக்கு ஆதிகொழுந்தை,Aadhi Kolunthai - முதல் தலைவனாய் என் இசைவினை,En Isaivinai - தன்னைக் கிட்டுமாறு எனக்கு இசைவை விளைவித்தவனான எம்பெருமானை யான்,Yaan - அடியேன் என் சொல்லி விடுவேனோ,En Solli vidueeno - என்ன குறையைச் சொல்லி விடக் கடவேனோ? விடமாட்டேன். |