| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2745 | திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இதுவும் கீழ்ப்பாட்டுக்கு சேஷ பூதம். திருவாய்ப்பாடியிலிடைப் பெண்கள் கண்ணபிரானை விட்டுப் பரமபதத்தை விரும்பினால் நானும் எம்பெருமானை விட்டுப் புறம்புபோவே னென்கிறார்) 5 | விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5 | என் விளக்கை,En Vilakkai - எனக்கு எல்லாப் பொருள்களையும் விளக்கிக் காட்டுகிற விளக்குப் போன்றவனும் என் ஆவியை,En Aaviyai - என் உயிரா யிருப்பவனும் நடுவே வந்து,Naduve Vandhu - திடீரென்று ஒரு நாளிலே உய்யக் கொள்கின்ற நாதனை,Uyyak Kolkindra Naadhanai - உஜ்ஜிவிப்பிக்னற ஸ்வாமியும் தொடுவே செய்து,Toduve Seydhu - கபடச் செயல்களையே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்,Ila Aaychiyar KanniNul - இளமை தங்கிய இடப் பெண்களின் கண்களிலே விடவே செய்து,Vidave Seydhu - விடத் தனமே செய்து விழிக்கும் பிரானை,Vizhikkum Piranai - கண் கலப்புச் செய்கிற பிரபுவுமாகிய எம்பெருமானை விடுவேனோ,Viduveno - விடவல்லேனோ? (விடமாட்டேன்) |