திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2746 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2746திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (ஆழ்வீர்! நீர் அவனை விடமாட்டாதொழியினும் அவன்றான் உம்மை விடில் என்செய்வீரென்ன; அவன் விடும் படியாக நான் ஸம்மதிப்பேனோ வென்கிறார்.) 6
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன் மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6
பதவுரை Show / Hide
பிரான்,Piran - உபகாரகனும்
பெருநிலம்,Perunilam - (வராஹாவதாரத்தில்)
கீண்டவன்,Keendavan - பெரிய பூமியைப் பிளந்தெடுத்தவனம்
பின்னும்,Pinnum - பின்னப்பட்ட (தொடுக்கப்பட்ட)
வீராய்,Veeraay - பரிமளம் பொருந்திய
துழாய் மலர்,Thuzhaa Malar - திருத்துழாய் மாலையாலே
வேய்ந்த,Veyndha - சூழப்பட்ட
முடியன்,Mudiyan - திருமுடியை யுடையவனும்
மராமரம் எய்த,Maramaram Eydha - ஏழு மராமரங்களை (ஸூ க்ரீவனுடைய நம்புதலுக்காக ஓர் அம்பினால்) எய்தவனுமான
மாயவன்,Maayavan - ஆச்சரிய பூதன்
என் உள்,En Ull - எனது நெஞ்சினுள்ளே
இரான் எனில்,Iran Enil - எழுந்தருளியிரானாயின்
பின்னை,Pinnai - பின்பு
யான்,Yaan - நான்
ஒட்டுவேனோ,Ottuveno - தரித்திருப்பேனோ?