திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2747 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2747திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (எம்பெருமான் தம்மை ஒருநாளும் விடமாட்டானென்பதை வற்புறுத்தி யருளிச் செய்கிறாரிதில். அவன் தானாகவே வந்து கைக் கொண்டவனாயிருந்து வைத்து எங்ஙனே விட்டு நீங்க வல்லானென்கிறார்.) 7
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7
பதவுரை Show / Hide
யான்,Yaan - நான்
ஒட்டி,Otti - இசைந்து
என்னுள்,Ennul - என்னுள்ளே
இருத்துவம் என்றிலன்,Iruthuvam Endrilan - (எம்பெருமானை) இருத்துவதாக நினைத்திலேன்;
தான்,Thaan - தானே
ஒட்டிவந்து,Otti Vandhu - பிரதிக்ஞை பண்ணி வந்து
என் தனி நெஞ்சை,En Thani Nenjai - என்னுடைய ஸ்வதந்திரமான மனத்தை
வஞ்சித்து,Vanjithu - நானறியாதபடி வசீகரித்து
ஊன் ஒட்டி,Oon Otti - சரீரத்திலே பொருந்தி
நின்று,Nindru - புகுந்து நின்று
என் உயிரில் கலந்து,En Uyiril Kalanthu - எனது ஆத்மாவில் கூடி
இயல்வான்,Iyalvaan - இப்படி நடக்கிற ஸர்வேச்வான்
இனி என்னை நெகிழ்க்க,Ini Ennai Nekkilka - இனி என்னை விட்டு நீங்க
ஒட்டுமோ,Ottumo - ஸம்மதிப்பனோ?