| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2748 | திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (அகடிதகடநா ஸமர்த்தனான எம்பெருமான்றன்னாலும் இனியொரு நாளும் வேறுபடுத்த வொண்ணாதபடி எனது நெஞ்சே அங்கே ஆழங்காற்பட்டு விட்டதென்கிறார். இதற்கு முன்புள்ள காலமெல்லாம் நான் அவனை விட்டு நெகிழ்ந்தவனே யாகிலும் இனி அங்ஙனம் ஒரு நாளும் நெகிழ மாட்டேன்; எம்பெருமான் தனது ஸ்வாததந்திரியத்தினாலே ஒருகால் என்னை நெகிழ விட்டாலும் விடக் கூடும். தன் பக்கலிலேயே ஊன்றிக் கிடக்கின்ற எனது நெஞ்சை ஒருவகையாலும் அப்புறப்படுத்த அவன் றன்னாலுமாகாது.) 8 | என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8 | பிள்ளை,Pillai - நப்பின்னைப் பிராட்டியினுடைய நெடு,Nedu - பெரிய பணை,Panai - சற்றுடைத்தான தோள்,Thol - தோள்களோடே அணையப் பெற்றதனாலுண்டான மகிழ பீடு உடை,Magizha Peedu Udai - ஆநந்தப் பெருமையை உடையவனும் முன்னை அமரர்,Munnai Amarar - பூருவர்களான நித்ய ஸூரிகளுக்கு முழுமுதலான்,Muzhumudhalaan - ஸகலமும் தானே யிருக்கப் பெற்றவனுமான எம்பெருமான் என்னை,Ennai - (ஒருகால்) என்னைப் பிரிய நெகிழ்க்கிலும்,Nekkilum - விட்டாலும் என்னுடை,Ennudai - என்னுடைய நல்நெஞ்சம் தன்னை,Nalnenjam Thannai - நல்ல நெஞ்சை அகல்விக்க,Akal Vikka - (தன்னிடத்தினின்றும்) பிரிக்க தானும்,Thaanum - ஸர்வ சக்தி யுக்தனான தானும் இனி,Ini - இனி மேல் கில்லான்,Killaan - ஸமர்த்தனாக மாட்டான். |