| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2749 | திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (“என்னுடைய நன்னெஞ்சந் தன்னை யகல்விக்கத் தானுங்கில்லான்” என்று சொல்ல வேண்டிய ப்ரஸக்தி தானுமில்லையே; எனது நெஞ்சும் அவனுஞ்சேர்ந்து ஒரு திரவியம் என்னலாம்படி ஒற்றுமை பெற்றுள்ள விதனைப் பிரிக்கும் வகை தான் உண்டோவென்கிறார்.) 9 | அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9 | அமரர்,Amarar - நித்ய ஸூரிகளுடைய முழு,Muzhu - ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி ஆகிய எல்லாவற்றிற்கும் முதல் ஆகிய,Mudhal Aagiya - ஹேதுவாய்க் கொண்டு ஈந்த,Eenth - (கடல் கடைந்து எடுத்துக்) கொடுத்தவனும், ஆயர் கொழுந்தை,Ayar Kolundhai - இடையர்களுக்குத் தலைவனுமான எம்பெருமானை என் ஆவி,En Aavi - எனது ஆத்மாவானது அமர அழும்ப துழவிய,Amara Azhumba Thuzhaviya - மிகவும் நெருக்கமாகக் கலசி ஆதியை,Aadhiyai - பிதானானவனும் அமரர்க்கு,Amaranukku - (இந்திராதி) தேவர்களுக்கு அமுது,Amuthu - (அவர்கள் விரும்பிய) அம்ருதத்தை அமர,Amara - இனி மேல் ஒருவராலும் பிரிக்க வொண்ணாதபடி தழுவிற்று,Thazhuvirru - உகந்து கலந்தது; இனி அகலுமோ,Ini Akalumo - இனி மேல் பிரிய வழியுண்டோ? |