திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2751 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2751திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இத்திருவாய்மொழிதானே இது கற்றவர்களினுடைய ப்ராப்தி ப்ரதி பந்தகங்களை வேரறுக்குமென்று பலன்சொல்லித் தலைக்கட்டுகிறது.) 11
குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன் மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –1-7-11
பதவுரை Show / Hide
வண்டு,Vandu - வண்டுகள்
குடைந்து,Kudainthu - உட்புகுந்து
உண்ணும் துழாய்,Unnum Thuzhaay - மதுவுண்ணப் பெற்ற திருத்துழாய் மாலையை
முடியானை,Mudiyaanai - திரு முடியிலணிந்த பெருமானை
அடைந்த,Adaintha - பணிந்த
தென் குருகூர் சடகோபன்,Then Kurugoor Sadagopan - திருநகரியிலவதரித்த ஆழ்வாருடைய
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து,Midaindha Sol Todai Aayirathu - நெஞ்கின சொல் மாலையாகிய ஆயிரத்தினுள்ளே
இ பத்து,E Pattu - இந்தத் திருவாய்மொழி
நோய்களை உடைத்து ஓடு விக்கும்,Noygalai Udaithu Odu Vikkum - ப்ராப்தி ப்ரதி ப்ந்தகங்களை உருக் குலைந்து ஓடும்படி செய்திடும்.