Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2766 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2766திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (ஒன்றாலொன்று குறைவில்லாதவனாய் ஸர்வரக்ஷகனான எம்பெருமான் யசோதைப் பிராட்டியின் இடுப்பிலிருக்குமாபோலே என்னிடுப்பிலே வந்திருத்தல் தனக்குப் பெறாப்பேறு என நினைத்திராநின்றனென்கிறார்) 4
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4
உடன் அமர் காதல்,udan amar kaadhal - கூடவே அமர்ந்திருக்கைக்கு விருப்பமுள்ள
மகளிர்,magalir - பிராட்டிமார் (யாவரென்னில்)
திருமகள்,thirumagal - ஸ்ரீமஹாலக்ஷ்மி
மண் மகள்,man magal - பூமிப்பிராட்டி
ஆயர் மடமகள்,aayar madamagal - இடைக்குலத்துப் பெண்ணாகிய நப்பின்னைப் பிராட்டி
என்ற இவர் மூவர்,endra ivar muvar - என்று சொல்லப்பட்ட இம் மூவராவர்;
ஆளும் உலகமும் மூன்றே,aalum ulagamum moondre - தன்னலாளப்படுகின்ற உலகங்களும் மூன்றேயாயிருக்கும்; ஆக இங்ஙனம் வாய்த்தவனும்)
அவை,avai - அவ்வுலகங்களை
உடன்,udan - விடாமலே
ஒக்க விழுங்க,okka vizhunga - ஏக காலத்திலே உண்டு
ஆல் இலை,aal ilai - ஆலிலையில்
சேர்ந்தவன்,cērandhavan - கண் வளர்ந்தவனும்
எம்மான்,emmaan - எனக்கு ஸ்வாமியும்
கடல் மலி மாயம் பெருமான்,kadal mali maayam perumaan - கடலிற்காட்டிலும் மிகப் பெரிய மாயச் செயல்களால் பெருமை பெற்றவனுமான
கண்ணன்,kannan - கண்ணபிரான்
என் ஒக்கலையான்,en okkalaiyaan - என் இடுப்பிலே வந்தமர்ந்தான்.