| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2768 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (அநுகூலர்க்கு எளியனாய், பிரதிகூலர்க்கு அரியவனான எம்பெருமான் எனது மார்பிலிருந்து தோளிணைக்கு ஏறிவிட்டானென்கிறார். கீழ்ப் பாட்டிற் சொன்னதையே மறுபடியும் “மாயனென்னெஞ்சினுள்ளான்” என்று அநுபாஷணஞ் செய்தது ஈடுபாட்டின் மிகுதியைக் காட்டும். இது என்ன பெறாப் பேறு! என்று தலை சீய்த்துச் சொல்லுகிறபடி.) 6 | மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6 | மாயன்,maayan - ஆச்சரியனான எம்பெருமான் என் நெஞ்சில் உள்ளான்,en nenjil ullaan - எனது நெஞ்சில் இருக்கின்றான்; மற்றும் யவர்க்கும்,matrum yavarkkum - வேறு யாருக்கேனும் அஃதே,akthe - அப்படி யிருப்பதுண்டோ? (இல்லை;) காயமும்,kaayamum - உடம்பும் சீவனும்,seevanum - உயிரும் தானே,thaane - தானேயாய் காலும்,kaalum - காற்றும் எரியும்,eriyum - நெருப்பும் அவனே,avane - அவன் தானேயாய், சேயன்,seyan - (சிலர்க்கு) தூரஸ்தனாய் அணியன்,anian - (சிலர்க்கு) ஸமீபஸ்தனாய் யவர்க்கும்,yavarkkum - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்,sindhaikkum kosaram allan - மனத்திற்கும் எட்டாதவனாய் தூயன்,thuyan - பரிசுத்தனாய் துயக்கன் மயக்கன்,thuyakkan mayakkan - (அநுக்ரஹ பாத்திரமாகாதவர்களுக்கு) ஸந்தேஹரூபமாயும் விபரீத ரூபமாயுமிருக்கும் ஞானங்களைப் பிறப்பிப்பவனான எம்பெருமான் என்னுடைய தோள் இணையான்,ennudaiya thol inaiyaan - எனது இரண்டு தோள்களிலுமுளனானான். |