| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2770 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (கலைகளெல்லாவற்றாலும் காணவேண்டியவனான எம்பெருமான் ப்ரமாணங்களாலே காணக்கடவதான தன் வடிவை என் கட்புலனுக்கு இலக்காக்கினானென்கிறார்) 8 | நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும் காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8 | நாவினுள் நின்று,naavinul ninru - நாவினிடத்தில் நின்றும் மலரும்,malrum - பரவுகின்ற ஞானம் கலைகளுக்கு எல்லாம்,gnanam kalaikaluku ellam - ஜ்ஞான ஸாதனமான எல்லாக் கலைகளினுடையவும் ஆவியும் ஆக்கையும் தானே,aaviyum aakkaiyum thaane - உயிரான அர்த்தமும் உடம்பான சப்தமும் தானிட்ட வழக்காம்படி யிருப்பவனும் அழிப்போடு அளிப்பவன் தானே,azhippoatu alippavan thaane - (அவற்றினுடைய) உத்பத்தி விநாசங்களும் தானிட்ட வழக்காம்படி யிருப்பவனும் பூ இயல் நால்,poo iyal naal - பூ மாறாத நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனும். பொருபடை ஆழிசங்கு ஏந்தும்,porupadai aazhisangu aendhum - (அத்திருத்தோள்களில்) போர் செய்கின்ற ஆயுதங்களாகிய திருவாழி திருச்சங்குகளைத் தரித்திருப்பவனும். காவி நல்மேனி,kaavi nalmeeni - கருநெய்தல் போன்று அழகிய திருமேனியை யுடையவனும் கமலம் கண்ணன்,kamalam kannan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனுமாகிய எம்பெருமான் என் கண்ணின் உளான்,en kannin ulaan - (இவ்வழகோடே) எனது கண்ணுக்குள்ளே யானான். |