| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2772 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் சிவனிந்திரன் முதலான மஹான்களுங்கூடத் தன்னைப் பெறுதற்கு ஸமயம் எதிர்பார்த்திருப்பாராய்த் தடுமாறும்படி யிருக்கிறவன் தான் என்னைப் பெறுகைக்கு அவஸரம் பார்த்து வந்து என் தலைமீது ஏறிவிட்டானென்கிறார்.) 10 | நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும் மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10 | ஒற்றை பிறை அணிந்தாலும்,otrai pirai aninthalum - சந்திரசேகரனாகிய சிவபெருமானும் நான்முகனும்,naanmuganum - பிரம தேவனும் இந்திரனும்,indiranum - தேவேந்திரனும் மற்றை அமரரும் எல்லாம்,matrai amararum ellaam - மற்றுமுள்ள எல்லாத் தேவர்களும் வந்து,vanthu - கிட்டி, நெற்றியுள்,netriyul - நெற்றியில் படிந்திருந்து நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி,ninru ennai aalum nirai malar paadhangaal soodi - என்னை யாள்கின்ற மலரொழுங் கமைந்த திருவடிகளை (த்தங்கள் தலையிலே) சூடிக் கொண்டு கற்றை துழாய் முடிகோலம் கண்ணபிரானை,katrai thuzhaay mudikolam kannabiraanai - செறிந்த திருத்துழாயாகிற வளைய மணிந்த எம்பெருமானை தொழுவார்,thozhvaar - வணங்கா நிற்பர்கள்; (அத்தகைய பெருமை வாய்ந்த எம்பெருமான்) எனது உச்சி உளான்,enathu ucchi ulan - என் தலையின் மேலே யானான். |