| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2775 | திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (எம்பெருமான் அடியார்களுக்குக் காட்சி தருந்தன்மை எப்படிப்பட்ட தென்றால், பரமபக்தி யுக்தர்க்கு முகங்காட்டுவது போலவே எண்ணிக்கையினால் தன்னைக் குறிப்பிடுமவர்களுக்கும் முகங்காட்டுந்தன்மை யுள்ளதென்று இப்பாட்டில் கூறப்படுகின்றது) 2 | கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம் மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2 | மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய்,mannum neerum eriyum nal vaayuvum vinnum aay - பூமி முதலிய பஞ்ச பூதங்களையும் சரீரமாக வுடையனாய்க் கொண்டு விரியும்,viriyum - ஜகத்தாகப் பரம்புகின்ற எம் பிரானை,em piranai - எம்பெருமானை காதன்மையால் தொழில்,kaadhanmaiyaal thozhil - பக்தியோடு தொழுதால் கண்ணுள்ளே,kannullae - (அவன்) நான் காணும்படி இருப்பன்; எண்ணிலும் வரும்,ennillum varum - ஒன்று இரண்டு என்று எண்ணினாலும் வந்து நிற்பன்; என் இனி வேண்டுவம்,en ini venduvam - இனி மேல் என்னகுறை? |