திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2779 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2779திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (“விடாது தொடர் கண்டாய்” என்ற ஆழ்வாரை நோக்கி நெஞ்சானது, நான் விடாது தொடர்கிறேன். அவன் விட்டால் செய்வதென்? என்ன; நைச்சியாநுஸந்தானம் பண்ணி நாம் அகலாதொழியில் நம்மை யொரு நாளும் அவன் விடானென்கிறார்) 6
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன் தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6
பதவுரை Show / Hide
நெஞ்சமே,nenjamae - மனமே!
நீயும் நானும்,neeyum naanum - நீயும் நானுமாக
இ சேர் நிற்கின்,e ser nirkin - இந்த நிலையிலே நின்றால்
மேல்,mel - இனி மேல்;
இ உலகினில்,e ulaginil - இவ் வுலகத்தில்
தாயும் தந்தையும் ஆய்,thaayum thandhaiyum aay - மாதாவும் பிதாவுமாகி
வாயும்,vaayum - அவதரித்துள்ளவனும்
மணிவண்ணன்,manivannan - நீல மணி வண்ணனும்
எந்தை,endhai - எமக்கு ஸ்வாமி யுமாகிய
ஈசன்,eesan - ஸர்வேச்வரன்
ம ற்று ஓர் நோயும் சார் கொடான்,ma rr u oar noayum saar kodaan - வேறொரு துன்பமும் அணுகவொட்டான்;
சொன்னேன்,sonnaen - இது உண்மையாகச் சொன்னேன்.