திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2781 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2781திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) ( விலக்ஷணர்கள் தாமே ஈடுபடுதற்கரித்தான பகவத் விஷயத்தில் தாம் ஈடுபடுவது தகாதென்று உறுதிகொண்ட ஆழ்வார், பகவத் விஷயம் நடையாடாத தோரிடத்திலே கிடக்கவேணுமென்று போய் ஒரு குட்டிச் சுவரிலே முட்டாக்கிட்டுக் கொண்டு கிடந்தாராம்; அங்கே பெருஞ்சுமை யெடுத்துபோகிற ஒரு வழிப்போக்கன் சுமைக்கனத்ததனால் அதனைக் கீழே தள்ளுவான் ‘ஸ்ரீமந்நாராயணா! என்று சொல்லிக்கொண்டே தள்ளினானாக, அச்சொல் செவிப்பட்ட மாத்திரத்திலே தம்முடைய கரணங்கள் மீண்டும் பகவத் விஷயத்தில் ப்ரவணமானபடியைக் கண்டு வியக்கிறார்) 8
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன் மாயமே அல்லும் நன்பகலும் இடைவீடின்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8
பதவுரை Show / Hide
செல்வம் நாராணன் என்ற,selvam naaranan endra - ஸ்ரீமந்நாராயணன் என்கிற வார்த்தையை
சொல் கேட்டலும்,sol kettalum - கேட்டவளவிலே
கண்,kan - கண்களானவை
பனி மல்கும்,pani malgum - நீர் ததும்புகின்றன
நாடுவன்,naaduvan - (எங்குற்றாய் எம்பெருமான்! என்று அவனைத்) தேடா நின்றேன்!
மாயமே,maayamae - இது ஆச்சரியமே;
நம்பி,nambi - எல்லாவற்றாலும் நிறைந்த அப்பெருமான்
நல் அல்லும் பகலும்,nal allum pagalum - நல்ல இரவும் பகலும்
இடை வீடு,idai veedu - இடைவிடாமல்
இன்றி நல்கி,indri nalki - கிருபை பண்ணி
நம்பி,nambi - என்மேல் விருப்பங்கொண்டு
என்னைவிடான்,ennaividaan - என்னை விடாதிருக்கிறான்.