திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2782 | திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (அவன் விடாதிருந்தாலிருக்கட்டும்; நீர் அவனை மறந்து ஸம்ஸாரிகளைப் போலே* உண்டியே உடையே உகந்தோடித் திரியமாட்டீரோ வென்ன, நான் எதையிட்டு அவனை மறப்பது? மறக்கும்வகை தெரியவில்லையே யென்கிறார்.) 9 | நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9 | பதவுரை Show / Hideநம்பியை,nambiyai - கல்யாண குண பரிபூர்ணனும் தென் குறுங்குடி நின்ற,then kurungudi nindra - திருக்குறுங்குடியிலே நிற்பவனும் அ செம்போனே திகழும் திருமூர்த்தியை,a semponae thigazhum thirumoorthyai - அழகிய செம்பொன் போலவே பிரகாசிக்கின்ற திருமேனியை யுடையவனும். உம்பர் வானவர்,umbar vaanavar - மேலான நித்ய ஸூரிகளுக்கு ஆதி,aadhi - காரண பூதனும் அம் சோதியை,am sodhiyai - அழகிய ஒளி யுருவனுமாகிய எம் பிரானை,em piranai - எம்பெருமானை என் சொல்லி,en soll - என்னவென்று மறப்பேன்,marappeen - மறப்பேன் |