திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2785 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2785திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (பிரிந்தவர்கள் இரங்குவது நெய்தல் நிலத்திலாதலால் ஆழ்வார்இப்போது கடற்கரைச் சோலையிலிருப்பதாகக் கொள்க. ஆங்கு உணவுக்காக ஊக்கங்கொண்டிருக்கின்ற ஒரு நாரை கண்ணுக்குப் புலப்பட, அதனுடம்பில் இயற்கையாகவுள்ள வெண்மையைக்கண்டு அதுவும் தம்மைப்போலவே பிரிவாற்றாமையினால் விவர்ணப் பட்டிருக்கின்றதாகக்கொண்டு நாராய்! ஐயோ! நீயும் நானகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு இப்படியானாயோ? -என்பதாகச் செல்லுகிறது இப்பாசுரம்) 1
வாயும் திரையுகளும் கானல் மடநாராய் ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால் நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல் நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1
பதவுரை Show / Hide
வாயும் திரை உகளும் கானல்,vaayum thirai ugulum kaanal - மேன் மேலுங் கிட்டுகின்ற அலைகள் தாவு மிடமான - கடற் கரையிலுள்ள சோலையிலுள்ள
மடம் நாராய்,madam naaray - இளமை தங்கிய நாரையே!,
ஆயம் அமர் உலகும் துஞ்சிலும்,aayam amar ulagum thunjilum - (நமது) தாயும் தேவலோகமும் உறங்கினாலும்
நீ துஞ்சாய்,nee thunjaay - நீ உறங்குகிறாயில்லை;
ஆல்,aal - ஆதலால்
நோயும் பயலைமையும் மீதூர,noyum payalaimaiyum meedoor - மனவருத்தமும் (அதன் காரியமான) பசலை நிறமும் மேலிட்டுவர
எம்மேபோல்,emmae pol - எங்களைப்போல
நீயும்,neeyum - நீயும்
திருமாலால்,thirumaalaal - திருமகள் கொழுநனான எம்பெருமானாலே
நெஞ்சம் கோள் பட்டாயே,nenjam kol pattaaye - நெஞ்சு பறித்துக் கொள்ளப் பட்டாயோ?