திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2786 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (அன்றில் என்பது ஒரு பறவை; குர்ரீ என்று வடமொழியிற் கூறப்படும், க்ரௌஞ்சமென்னவும் படும். அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும் அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணைபிரியாது நிற்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றை ஒன்று இரண்டு மூன்றுதரம் கத்திக்கூவி அதன் பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற்பறவை இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னில் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல் ஆழ்வாரது திருச்செவியிலே விழுந்ததாக, அதுவும் பகவத் விஷயத்திலீடுபட்டுப் பிரிவாற்றாமையினால் கத்துகின்றதெனக்கொண்டு, ஐயோ! நீயும் என்னைப்போலே ஆழியானென்னுமாழமோழையில் அகப்பட்டாயே; என்கிறது இப்பாசுரம்.) 2 | கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2 | பதவுரை Show / Hideகோள்பட்ட,kolpatta - அபஹரிக்கப்பட்ட சிந்தையை ஆய்,sinthaiyai aay - நெஞ்சை யுடையையாகி கூர்வாய,koorvaay - (அதனால்) தழதழத்த குரலையுடைய அன்றிலே,anrilley - அன்றில் பறவையே! சேண்பட்ட,senpatta - நெடிதான யாமங்கள்,yaamangal seraadhu - சாமங்கள் தோறும் சேராது,seraadhu - படுக்கையிற் சேராமல் இரங்குதி,irangudhi - வருந்துகின்றாய்; ஆல்,aal - ஆதலால் ஆள்பட்ட,aalpatta - அடிமைப்பட்ட எம்மே போல்,emmae pol - எங்களைப் போலவே நீயும்,neeyum - (பிரிவாற்றாமை தோற்றவிருக்கிற) நீயும் அரவு அணையான்,aravu anaiyaan - சேஷசாயியான எம்பெருமானது தாள்,thaal - திருவடிகளிலே பட்ட,patta - ஸம்பத்தம்பெற்ற தண்,than - குளிர்ந்த துழாய் தாமம்,thuzhaay thaamam - திருத்துழாய்மாலையை காமுற்றாயே,kaamurrthaaye - ஆசைப்பட்டாயோ? |