திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2787 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2787திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (கடல் பெருமுழக்கஞ் செய்வதும் அலையேறுவது வடிவதுமாயிருப்பதும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை யறியாதே அதுவும் தம்மைப்போலே எம்பெருமான் திருவடிகளில் நசைவைத்து விரும்பனபடியே லபிக்கப் பெறாமையினாலே தன் காம்பீரிய மெல்லாமிழந்து கரையிலே வருவது கரையேறமாட்டாதே உள்ளே விழுவதாய் எழுத்துஞ் சொல்லும் பொருளும் தெரியாதபடி சத்துகின்ற தாகக்கொண்டு, ஐயோ! நீயும் இராமபிரானது திருக்குணங்களில் அகப்பட்டு நான் படும்பாடு பட்டாயோ என்கிறதாய்ச் செல்லுகிறது இப்பாசுரம்.) 3
காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல் நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால் தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3
பதவுரை Show / Hide
எல்லே !,Elle! - கனைகடலே!
காமுற்ற கை அறவோடு,kaamurrtha kai aravoodu - விரும்பின பொருள் கை கூடப்பெறாத இழவினால்
நீ,nee - நீ
இராபகல் முற்ற,iraabakal muttru - இரவும் பகலுமாகிய எப்போதும்
கண் துயிலாய்,kan thuyilaay - கண்ணுறங்காதாகி
நெஞ்சு,nenju - உள்ளிடமும்
உருகி,urugi - நீராகி
ஏங்குதி,aengudhi - ஏங்குகின்றாய்;
ஆல்,aal - ஆதலால்
தென் இலங்கை,then ilankai - தென்னிலங்காபுரி முழுவதும்
தீ ஊட்டினான்,thee oottinaan - நெருப்புக்கு உணவாக்கின பெருமானுடைய
தாள்,thaal - திருவடிகளை
நயந்த,nayandha - ஆசைப்பட்ட
யாம்,yaam - நாங்கள்
உற்றது,uttrathu - அடைந்த வருத்தத்தை
உற்றாயோ,uttraayo - நீயும் அடைந்தாயோ?
வாழி,vaazhi - (நீ மனத்துன்பம் தீ;ர்ந்து) வாழ்வாயாக.