| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2788 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (காற்றானது எங்கும் பரவிய தத்துவம் அது ஒரு நொடிப் பொழுதும் ஓரிடத்தில் நிலை நின்றிராது; மாதாரிச்வா ஸதாகதி; என்ற நிகண்டின்படி ஸதாகதியென்று பெயர் பெற்றதாதலால் எப்போதும் உலாவிக் கொண்டேயிருக்கும் உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவதெரியாதபடியிருக்கும் குளிர்ச்சியுடைத் தாயுமிருக்கும் ஆக இத்தனை யும் அ;தற்கு இயல்வாயிருக்க, அதனை அறிய கில்லாதே அதுவும் தம்மைப்போலவே பகவத் விஷயத்தில் ஆசைவைத்து விருப்பம் நிறைவேறப் பெறாமையினாலே இருந்தவிடத்தில் இருக்க மாட்டாதே மடலூருவாரைப்போலே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய் ஸந்நிபாத ஜ்வரமுற்றுக் குளிர்ந்திருப்பதாகக்கொண்டு வாடையே! நீயும் நான் பட்டது பட்டாயன்றோ என்கிறாள்.) 4 | கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல் சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய் அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4 | தண் வாடாய்,than vaadaay - குளிர்ந்த காற்றே! கடலும்,kadalum - ஸமுத்திரத்தையும் மலையும்,malaiyum - மலையையும் விசும்பும்,visumbum - ஆகாசத்தையும் துழாய்,thuzhaay - தடவிக்கொண்டு எம்மைப்போல. சுடர் கொள் இராபகல்,sudar kol iraabakal - சந்திர ஸுரியர்களாகிற இரு சுடர்களையும் (தம்மிடத்து முறையே) கொண்ட இரவிலும் பகலிலும் துஞ்சாய்,thunjaay - நீ கண்ணுறங்குகின்றிலை ஆல்,aal - ஆதலால் அடல்கொள்,adal kol - வலிமைகொண்ட படைஆழி,padaiaali - திருவாழிப் படையுடைய அம்மானை,ammaanai - எம்பெருமானை காண்பான்,kaanpaan - காணுதற்பொருட்டு நீ,nee - நீ ஊழி ஊழிதோறு,oozhi oozhidhoru - நெடு நாளாக உடலம் போய் உற்றாயோ,udalam poi uttraayo - உடம்பு நோவு கொண்டாயோ? |