திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2789 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2789திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (நீராய் இற்று விழுகின்ற மேகத்தைக்கண்டு, நீயும் என்னைப்போலே எம்பெருமானுடைய குணசேஷ்டிதம் முதலியவற்றில் அகப்பட்டு நோவுபடுகிறாய் போலுமென்று சோகித்துச் சொல்லுகிற பாசுரம் இது. மேகம் நீர்சொரிவதைக் கண்ணீர் விட்டு அழுகிறபடியாக வெண்ணிச் சொல்லுகிறாள்.) 5
ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற வாழிய வானமே நீயும் மதுசூதன் பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5
பதவுரை Show / Hide
உலகுக்கு நீர்கொண்டு,ulagukku neer kondu - உலகுக்கெல்லாம் ஆகும்படி நீரை முகந்து கொண்டு
ஊழி ஊழி தோறு,oozhi oozhi thooru - காலமுள்ளவளவும்
நீர்ஆய்,neer aay - நீர்வடிவமாய்
நெகிழ்கின்ற,nekizhkindra - விழுகின்ற
வானமே,vaaname - மேகமே !
நீயும்,neeyum - நீயும்
தோழியரும் யாமும் போல்,thozhiyarum yaamum pol - (எமது) தோழிமார்களும் நாங்களும்போல
மதுசூதன் பாழிமையில் பட்டு,madhusoodhan paalimaiyil pattu - எம்பெருமானது பெருமிடுக்கிலே அகப்பட்டு
அவன் கண் பாசத்தால்,avan kan paasathaal - அவனிடத்து விருப்பத்தினால்
நைவாயே,naivaayae - அழிகின்றனையோ?
வாழிய,vaazhiya - (இந்தத் துன்பம் தீர்த்து) வாழ்வாயாக.