திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2790 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2790திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (கலாமாத்ரமாய் தேய்ந்து தோன்றின இளம்பிறைச் சந்திரனைக்கண்டு அந்தோ!உன் வடிவில் எழிலெல்லாம் இழந்தாயே! நீயும் அப்பெருமானுடைய பொய்யுரையிலே நம்பிக்கை கொண்டு நான் பட்டபாடு படுகின்றாய்போலும் ! என்கிறாள்.) 6
நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள் மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால் ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார் மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –2-1-6
பதவுரை Show / Hide
நாள் மதியே,naal madhiye - நிரம்பின சந்திரனே !
நைவு ஆய,naivu aay - நைந்து போவதையே இயற்கையாகவுடைய
எம்மே போல்,emmae pol - எங்களைப்போல (ஒளி யுரவாகிய) நீயும்
இ நாள்,i naal - இக்காலத்திலே
மை வான்,mai vaan - காரிய ஆகாயத்திலுள்ள
இருள்,irul - இருளை
அகற்றாய்,akkaraay - நீக்குகின்றிலையாகி
மாழாத்து,maazhaathu - மயங்கி
தேம்புதி,thembuthi - குறைபடுகின்றாய்;
ஆல்,aal - ஆதலால்
ஐ வாய்,ai vaay - ஐந்து முகங்களுடைய
அரவு அணை மேல்,aravu anai mel - சேஷசயனத்தின் மீது உள்ள
ஆழி பெருமானார்,aazhi perumanaar - சக்கரபாணியான எம்பெருமானது
மெய் வாசகம் கேட்டு,mei vaasagam kettu - உண்மையான வார்த்தையைக் கேட்டு
உன் மெய் நீர்மை,un mei neermai - உனது வடிவின் குணமாகிய ஒளியை
தோற்றாயே,thoorraayae - இழந்தாய் போலும்!