திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2791 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (ஒருவரையொருவர் காணவொண்ணாதபடி மூடின இருளைக்குறித்து ‘இருளே. எம்பெருமானைப் பிரிந்து நோவுபட்டிருக்கிறவென்னை நீயும் இப்படி ஹிம்ஸிப்பாயோ? என்றுபொடிந்து பேசுகின்றாள்.) 7 | தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7 | பதவுரை Show / Hideகனம் இருளே,kanam irulae - கனத்திருக்கின்ற இருளே ! எம்பெருமான்,emperumaan - எமக்கு ஸ்வாமியான நாரணற்கு,naaranarkku - நாராயணனுக்கு மடம் நெஞ்சம் தோற்றோம்,madam nenjama thortrom - விதேயமான நெஞ்சைப் பறிகொடுத்தோமாகி எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை,em aatrraamai sollu aluvoamai - எங்கள் ஆற்றாமையை வாய்விட்டுச் சொல்லி அழுகின்ற எங்களை நீ,nee - நீ நடுவே,naduve - நடுவில்நுழைத்து வேற்றோர்வகையின்,vertror vakaiyin - பவைகர்கள் நலிகிற வகையைக் காட்டிலும் கொடிது ஆய்,kodithu aay - கொடுமையாகி எனை ஊழி,enai oozhi - காலமுள்ளவளவும் மாற்றாண்மை,maattraanmai - பகைவரது தன்மையை ஆளகையில் நிற்றியோ,nirtriyo - நிற்கிறாயோ? வாழி,vaazhi - இந்நிலைமை நீங்கி வாழ்வாயாக. |