திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2793 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2793திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கு எரிகிற விளக்கைக் கண்டு அதன் வெப்பத்தைப் பார்த்து ‘உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி விரஹஜ்வரம் பற்றி யொரியா நின்றது’ என்று கொண்டு நீயும் என்னைப் போலே பகவத் விரஹத்தாலே வெதும்புகிறாயோ வென்கிறாள்.) 9
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய் செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான் அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9
பதவுரை Show / Hide
நந்தா விளக்கமே,nandhaa vilakkamae - அழிவில்லாத விளக்கே !
அளியத்தாய்,aliyathaay - இரங்கத்தகுதியுடைய
நீயும்,neeyum - நீயும்
நொந்து ஆரா காதல் நோய்,nondhu aaraa kaadal noi - நோவுபட்டு மாளாத ஆசை நோயானது
மெல் ஆவி,mel aavi - மெல்லிய பிராணனையும்
உள் உலர்த்த,ul ularttha - உள்ளே உலர்த்த,
செம் தாமரை தடகண்,sem thaamarai thadakan - சிவந்த தாமரை மலர் போன்ற பெரிய கண்களையும்
செம் கனி வாய்,sem kani vaay - சிவந்த கோவைக்கனி போன்ற வாயையுமுடைய
எம்பெருமான்,emperumaan - எம்பெருமானது
அம் தண்துழாய் தாமம்,am thandhuzhaay thaamam - அழகிய குளிர்ந்ததிருத்துழாய் மாலையின் மீதுள்ள
ஆசையால்,aasaiyaal - விருப்பத்தினால்
வேவாயே,vevaayae - வேகின்றாயோ?