| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2795 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இப்படி எம்பெருமானைப் பிரிந்த துயரத்தினால் முடியப்புகுகிற தம்மை உய்வித்தற் பொருட்டு ஸேவை ஸாதித்தருளின எம்பெருமானைக் கண்டு தாம் உஜ்ஜீவித்து, தம்முடைய உஜ்ஜீவனத்தாலே எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வம் ஒளி பெற்ற படியைக்கண்டு சாலவுமுவந்து அவனுடைய ஸர்வேச்வரத்தை நெஞ்சார அநுபவித்து, இப்படி ஸர்வேச்வரனாயிருந்த எம்பெருமான் பக்கலுள்ள ஆசையாலே இத்திருவாய்மொழியை நியதமர்க அநுஸந்திக்குமவர்கள் ஒருநாளும் எம்பெருமானைப் பிரியார்கள்.இது திண்ணம் என்று இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.) 11 | சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11 | சோராத,sooraada - ஒன்றுங்குறையாத எப்பொருட்கும்,eporutkum - எல்லாப் பொருள்களுக்கும் ஆதி ஆம்,aadhi aam - காரண பூதனாகப்பெற்ற சோதிக்கே,sothikke, jyothike - ஒளியுருவனான எம்பெருமானுக்கே ஆராத காதல்,aaraadha kaadal - அடங்காத ஆசையையுடையரான குருகூர்சடகோபன்,kurukoor sadagopan - ஆழ்வார் ஓர்ஆயிரம்,oar aayiram - ஓராயிரமாக சொன்ன அவற்றுள்,sonna avartrul - அருளிச்செய்த பாசுரங்களுக்குள்ளே இவை பத்தும்,ivai pattum - இ;ந்த பத்துப் பாசுரங்களையும் சோரார்,sooraar - மறவாதவர்கள் வைகுந்தம் –,vaigundham, vaikuntam - பரமபதத்தை திண்ணெனவே,thinave - திடமாகவே விடார் கண்டீர்,vidar kandeer - விடாமல் நித்யானுபவம் பண்ணப்பெறுவர்கள். (கண்டீர்—–முன்னிலையசை.) |